Hello Friends!
இன்னைக்கு Loots
நிறைய எப்படி எடுக்கறதுன்னு நாம பாக்க போறோம். நம்ம எல்லாருக்கும்
நிறைய Loot எடுக்கனும்னு நிறைய ஆசை இருக்கும்.
ஆசைன்னு சொல்லறத விட கட்டாயம்னு சொல்லலாம். Because,
Defense, Resources, Barracks, Walls, King and Queen etc., னு நிறைய
upgrade பண்ண வேண்டியது இருக்கும்.
இந்த upgrade கு எல்லாம் நிறைய resources (Gold, Elixir and Dark Elixir) காக Loot attacks போகவேண்டியது கட்டாயம். அப்படி
போகவேண்டிய Loot attacks ல சில சமயம்
அதிகமான Loot ம் பல சமயம் ரொம்ப கம்மியான
loot ம் கிடைக்கும். இது தான் எல்லாருக்கும்
இருக்கற பிரச்னை. காலைல போற முதல் attack
ல நிறைய loots கிடைச்சா
அன்னைக்கு முழுதும் நல்லா போகும். அதுவே முதல் attack
failure ஆனதுனா முழு நாளும் கடுப்பா இருக்கும் (அந்த நேரத்துல
தான் நம்ம நண்பர்கள் Big Loot, Mini Loot னு ஷேர்
பண்ணி நம்மள காண்டு பண்ணுவாங்க). அப்படி loot
attacks failure ஆக என்ன காரணம்? நிறைய loots எப்படி எடுக்கலாம்? எந்த நேரத்துல loots நிறைய கிடைக்கும்? loots நிறையா கிடைக்க என்ன செய்யணும்? எந்த troops use பண்ணா நல்லா இருக்கும்? இப்படி பல கேள்விகளுக்கு எனக்கு
தெரிஞ்சத சொல்றேன்.

1. நாம இருக்கற League:
நாம எல்லாரும் ஒவ்வொரு Town Hall level ல இருப்போம். அந்த Town Hall
Level கு சரியாய் இருக்கற
மாதிரி ஏதோ ஒரு league ல கண்டிப்பா இருப்போம்.
நாம இருக்குற league நமக்கு ரொம்ப முக்கியமான ஒன்னு. நமக்கு எந்த league ல நல்லா loot கிடைக்குதுன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்
(முடிஞ்சா அதுலையே இருக்க முயற்சி பண்ணுங்க).
குறிப்பு : நான் இப்போ TH9 ல இருக்கேன் (இன்னும் 2 வாரத்துல TH 10 போகபோறேன்) எனக்கு Gold III
League சரியா இருக்கு. இங்க
நான் share பண்ண picture எல்லாமே ஒரு நாள்ல (18.11.2015) எடுத்தது. இது நான் சாதரணமா எடுக்கறது தான். இதுவே Holiday,
Sunday னா இன்னும் அதிகமா
இருக்கும்.
2. நம்மளோட Base Design:
நாம எந்த அளவுக்கு loot எடுத்தாலும் நமக்கிட்ட இருக்கற loot ah எடுக்க பல பேர் வருவாங்க.
அப்படி வரவங்களுக்கு நம்ம base கஷ்டமா இருக்கற மாதிரி நம்ம base design இருக்கறது ரொம்ப முக்கியம்.
நம்மகிட்ட நல்ல defense இருந்தா Hybrid Base Design use பண்ணலாம். Strong ஆன defense இல்லைனா Farming Base Design use பண்ணலாம். எது சரியாய்
இருக்குமோ அத use பண்ணுங்க.
குறிப்பு : நான் 40 லட்சதுக்குமேல இருந்தா Farming Base use பண்ணுவேன், 40 லட்சதுக்கும் கம்மியா இருந்தா Hybrid
Base use பண்ணுவேன்.
3. Next! Next!! Next!!!
Loot Attack கு ரொம்ப ரொம்ப முக்கியமானது நேரமும், பொறுமையும் தான். நமக்கு
free time எப்போ கிடைக்குதோ அப்போ தான் விளையாட முடியும். அப்படி நாம விளையாடுற நேரத்துல
உலகத்துல நிறைய பேரு விளையாடுவாங்க, அப்போ நமக்கு loot கிடைக்குறது கஷ்டமா இருக்கும் அந்த நேரத்துல (நிறைய Next
குடுக்க வேண்டியது
இருக்கும்) பொறுமை ரொம்ப அவசியம். நமக்கு எந்த நேரத்துல நிறைய loot கிடைக்குதுன்னு தெரிஞ்சி
வெச்சிகனும். அந்த நேரத்துல தினமும் விளையாடுங்க நிறைய loot எடுங்க.
குறிப்பு : இந்திய நேரப்படி 10.30 am - 12.00 noon ம், மதியம் 2.30 pm - 4.00 pm ம், இரவு 11.30
pm கு மேல நல்ல loot
கிடைக்குது. இந்த நேரத்துல
try பண்ணிட்டு சொல்லுங்க
friends.
4. Loot Troops:
நாம ஒவ்வொருத்தரும் loot attack குனு ஒவ்வொரு troops use பண்ணுவோம். நிறைய பேரு Loot
attack கு "BARCH"
(Barbarian + Archer) / "BAM" (Barbarian + Archer + Minions) use பண்ணுவாங்க. But,
இந்த ரெண்டு Attack
ம் வேஸ்ட். இந்த Type
attack ல கைவிடப்பட்ட Village
(Dead Base) மட்டும் தான் அடிக்க
முடியும் அதுலையும் சில அட்டாக் failure ஆயிடும், இல்லனா spell use பண்ணற மாதிரி ஆயிடும். Loot Attack க்கு சிறந்தது Giant, Healer
& Archer attack தான். இந்த Type attack ல நாம முழு base யும் அடிக்கலாம். இதுக்கும் BARCH attack கு பண்ற elixir
cost ah விட 15,000
elixir தான் எக்ஸ்ட்ராவா ஆகும்.
நீங்களே ஒரு சின்னதா கணக்கு போட்டு பாருங்க, உங்களுக்கே தெரியும்.
குறிப்பு : நான் எப்போவுமே Level 6 Giant : 18, Level 5 Goblins : 20,
Level 5 Wall Breaker : 4, Level 6 Archer : 68, Level 4 Healer : 1 and Level 3
Minions : 10 ம் கொண்டு போவேன்.
இந்த அட்டாக் ல என்னால நல்லா loot எடுக்க முடியுது.
Loots நிறைய கிடைக்க சில டிப்ஸ்:
1. சில நேரத்துல செமையா loot கிடைக்கும், ஆனா நம்மால எடுக்க முடியாம failure attack ஆயிடும். அதுனால நமக்கு
எந்த troops set ஆகுமோ அந்த troops மட்டும் வெச்சி attack போங்க.
2. Loot attack போனா தொடர்ந்து 2-3 அட்டாக் போங்க (அப்போ தான் நிறைய Loot கிடைக்கும்).
3. சரியான loot கிடைக்கலேன்னா King இல்ல Queen மட்டும் விட்டு ஒரு attack failure பண்ணிட்டு, திரும்ப Search பண்ணுங்க, இப்ப சீக்கரமா நல்ல loot கிடைக்கும்.
குறிப்பு : இந்த article மொத்தமும் என் நண்பர்கள் மற்றும் என்னோட அனுபவத்துல சொல்றது.
சிலரக்கு set ஆகாம கூட போகலாம்.
Try பண்ணி பாருங்க! நிறைய loot எடுங்க!! உங்க Clan ல Share பண்ணி Friends எல்லாரையும் வெருப்பேத்துங்க!!! அடுத்து, அடுத்த வாரம் வர New Sneak Peak பத்தின செய்தியோட வரேன்.
Bye Friends!!!! HAPPY COC.....
By Karthik Loganathan